உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தள்ளுவண்டி கடையில் அறுந்து விழுந்த மின்கம்பி

தள்ளுவண்டி கடையில் அறுந்து விழுந்த மின்கம்பி

திருப்போரூர்:கேளம்பாக்கம் - திருப்போரூர் இடையே உள்ள ஓ.எம்.ஆர்., சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலை ஓரம் மின்தடம் செல்கிறது. நேற்று மாலை 6:30 மணியளவில், கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சியில், சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் இருந்து ஒரு மின்கம்பி, திடீரென அறுந்து அங்கிருந்த சாலையோர தள்ளுவண்டி கடை மீது விழுந்தது. இதைப் பார்த்த தள்ளுவண்டி கடைக்காரர், கடையை விட்டு அலறி ஓடினார். அருகே இருந்தவர்களும், பாதுகாப்பாக ஒதுங்கி நின்றனர். இதனால், அதிர்ஷ்டவசமாக மின் விபத்திலிருந்து அங்கிருந்தோர் தப்பினர். உடனே, மின்வாரியத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்கம்பி சரி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை