உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணை ஏமாற்றி உல்லாசம் நகையுடன் வாலிபர் மாயம்

பெண்ணை ஏமாற்றி உல்லாசம் நகையுடன் வாலிபர் மாயம்

கோயம்பேடுவிருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர், 47 வயது பெண், தினக்கூலி வேலைக்காக விருகம்பாக்கம், சாய் நகர் மார்க்கெட் அருகே கடந்த 31ம் தேதி காத்திருந்தார்.அங்கு வந்த வாலிபர், ஒரு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் எனக்கூறி, பைக்கில் அவரை ஏற்றிச் சென்றார்.வழியில் ஆசை வார்த்தை கூறி, கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள, தனியார் லாட்ஜுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு ஒரு அறை எடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின், பெரிய கம்மல் வாங்கி தருவதாக கூறி, அப்பெண் அணிந்திருந்த அரை சவரன் சிறிய கம்மலை வாங்கிச் சென்றுள்ளார்.பல மணி நேரமாகியும், அந்த நபர் வரவில்லை. தவிர, கழுத்தில் இருந்த 1.5 சவரன் தாலி செயின் மாயமானதும் தெரிந்தது. இதையடுத்து அப்பெண், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார், அந்த லாட்ஜின் பதிவேட்டில் எழுதப்பட்டிருந்த கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த எட்வின்ஷான், 32, என்பவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ