உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக்கிலிருந்து விழுந்து வாலிபர் பலி நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

பைக்கிலிருந்து விழுந்து வாலிபர் பலி நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்

செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் ஸ்ரீஹரி,20. இவர் நேற்று முன்தினம் மாலை தென்மேல்பாக்கத்தில் இருந்து மகேந்திரா வேல்டு சிட்டிக்கு, தன் 'யமஹா ஆர்15' பைக்கில் சென்றார்.விப்ரோ தொழிற்சாலை எதிரே சென்ற போது, தெரு நாய் குறுக்கு வந்ததால், ஸ்ரீஹரி பிரேக் போட்டார். அப்போது துாக்கி வீசப்பட்ட இவர், சாலை ஓர மரத்தில் மோதி படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு திருத்தேரி பகுதியில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீஹரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை