போதையில் தகராறு செய்த வாலிபர் அடித்து கொலை
திருப்போரூர்:சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் பூபதி, இவர் நண்பர்கள் பாஸ்கர் 38, விஷ்ணு ஆகியோர் கடந்த 13 ம் தேதி திருப்போரூர் அடுத்த மேலையூருக்கு வந்தனர்.மேலையூரில் உள்ள பூபதி உறவினர் இடத்தை மூன்று சுத்த படுத்தியுள்ளனர். அன்று இரவு அப்பகுதி பொது இடத்தில் அனைவரும் மதுஅருந்தியுள்ளனர்.அப்போது அந்த வழியாக சரண், 24 என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவரை அழைத்து பாஸ்கர் தசிகரெட் வேண்டும் வாங்கிவா என, கூறியுள்ளார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முடிந்து அங்கிருந்து சென்ற சரண் மீண்டும் இரவு 11:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். மது அருந்திய மூவரும் போதையில் அங்கேயே படுத்து துாங்கி கொண்டு இருப்பதை பார்த்துள்ளார். தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஸ்கரை அருகில் இருந்த மரக்கட்டையால் தாக்கி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் காயத்துடன் கிடந்துள்ளார். தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து, மேலையூரை சேர்ந்த சரண் என்பவரை போலீசார் கைது செய்தனர்.