திருப்போரூரில் இன்று ஆடி கிருத்திகை விழா
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகை விழா நடக்கிறது.திருப்போரூரில் ஆறுபடை வீட்டிற்கு நிகரான, கந்தசுவாமி கோவில்உள்ளது. இக்கோவிலில் பிரபலமாக கொண்டாடப்படும் கிருத்திகைகளில், ஒன்றான ஆடிகிருத்திகை விழா இன்று நடக்கிறது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் வருவர். ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெறும்.முன்னதாக, நேற்று இரவு பரணி உற்சவத்தில், கந்த பெருமான்சிறப்பு அலங்காரத்தில், மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.