மேலும் செய்திகள்
மறைமலைநகரில் வழிப்பறி இருவருக்கு போலீஸ் 'காப்பு'
14-Aug-2025
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், தலைமறைவு குற்றவாளிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர். சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தீபக், 22. இவர் மீது செங்கல்பட்டு, பாலுார், மறைமலை நகர் காவல் நிலையங்களில், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது நண்பரான, மறைமலை நகர் அடுத்த சித்தமனுார் பகுதியைச் சேர்ந்த கணேஷ், 26, என்பவர் மீதும், மறைமலை நகர் காவல் நிலையத்தில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த இருவரையும், மறைமலை நகர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இவர்கள் சிங்கபெருமாள் கோவிலுக்கு வந்துள்ளனர். இதையறிந்த போலீசார், முத்துமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணைக்குப் பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
14-Aug-2025