மேலும் செய்திகள்
உயர்கோபுர மின்விளக்கு களக்காட்டூரில் அமைப்பு
28-May-2025
சித்தாமூர், ஈசூர் சாலை சந்திப்பில், உயர் கோபுர மின்விளக்கு இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சித்தாமூர் அடுத்த ஈசூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஈசூர் பகுதியில், தொழுப்பேடு - சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, புத்திரன் கோட்டை செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியை, தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.இந்த சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஈசூர் சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-May-2025