உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மரக்கட்டையால் விபத்து அபாயம்

மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மரக்கட்டையால் விபத்து அபாயம்

சித்தாமூர்:போந்துாரில், தாழ்ந்து செல்லும் மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மரக்கட்டையால், விபத்து அபாயம் நிலவுகிறது.சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு நுகும்பல் துணை மின் நிலையம் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது.வயல்வெளியில் உள்ள மோட்டார்களுக்கு மின்வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள், போந்துார் - விளாங்காடு சாலை சந்திப்பில் தாழ்ந்து சென்றன. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகனங்களின் மீது மின் கம்பிகள் உரசி, விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், மரக்கட்டைகள் கொண்டு மின் கம்பிகள் உயர்த்தி அமைக்கப்பட்டன.இந்நிலையில், பலத்த காற்று வீசினால் மரம் முறிந்து, விபத்து ஏற்படும் நிலை உள்ளது.இதனால், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன், தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை