உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் சாலை, 25 கி.மீ., துாரம் கொண்ட ஆறுவழி மாநில நெடுஞ்சாலை. இந்த சாலையை தினமும் 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் திருக்கச்சூர், ஒரகடம் பகுதிகளில் அணுகு சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவதால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருக்கச்சூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கிராமத்தின் உள்ளே இருந்து நெடுஞ்சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர்.சர்வீஸ் சாலையை பயன்படுத்தி மேம்பாலத்தின் மீது சென்று வரும் வாகன ஓட்டிகள், தடுமாறி வருகின்றனர். இந்த சாலையில் பல இடங்களில், முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்தும் ஓட்டுநர்கள், பல மணி நேரம் கழித்து வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர்.இதன் காரணமாக திருக்கச்சூர், பெரியார் நகர், ஒரகடம் பகுதிகளில் விபத்து தொடர்கதையாக உள்ளது. எனவே, இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த, போலீசார் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை