உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரத்திலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்

தாம்பரத்திலிருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்

சென்னை:'பயணியரின் தேவைக்கு ஏற்ப, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, 40 பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையின் மத்திய பகுதியில் இருப்பவர்கள், தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி, வெளியூர் பஸ்களை பிடித்து செல்ல வசதியாக உள்ளது. குறிப்பாக, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு தினமும், 40 பஸ்களை இயக்கி வருகிறோம். தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், தேவைக்கு ஏற்ப அதிகரித்து இயக்கி வருகிறோம்.இடநெருக்கடி இருப்பதால், ஒரே நேரத்தில் பஸ்களை வரிசையாக நிறுத்த முடியாது. எனவே, கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு, தாம்பரம் வந்து, பின் வெளியூர்களுக்கு பஸ்களை இயக்கி வருகிறோம். சில வாரங்களாக, கூடுதலாக 40 பஸ்களை வரை அதிகரித்து இயக்கி வருகிறோம். கூட்ட நெரிசல் அதிகரிக்கும்போது, கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை