உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

சென்னை, 'பயணியர் நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு விரைவு ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும், என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.l ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் - எழும்பூர் சிறப்பு ரயிலில், வரும் 14 முதல் 2025 மார்ச் வரையும்; எழும்பூர் - விசாகப்பட்டினம் சிறப்பு ரயிலில் வரும், 15 முதல் 2025 மார்ச் 2 வரையும், ஒரு, 'ஏசி' பெட்டியும், 'ஏசி' இல்லாத ஒரு படுக்கை வசதி பெட்டியும் இணைத்து இயக்கப்படும்l ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் - ஈரோடு சிறப்பு ரயிலில், வரும், 11 முதல் 25ம் தேதி வரையும்; ஈரோடு - சாம்பல்பூர் சிறப்பு ரயிலில், வரும், 13 முதல் 27ம் தேதி வரையும், ஒரு 'ஏசி' பெட்டியும், 'ஏசி' இல்லாத படுக்கை வசதி பெட்டியும் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ