உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வலையில் சிக்கும் ஆமைகள் பாதுகாப்பாக விட அறிவுரை

வலையில் சிக்கும் ஆமைகள் பாதுகாப்பாக விட அறிவுரை

மாமல்லபுரம்,:மீன்பிடி வலையில் சிக்கும் கடல் ஆமைகள் இறப்பை தவிர்க்க, அவற்றை வலையிலிருந்து மீட்டு கடலில் விடுமாறு, மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.கடலில் வாழும் உயிரினங்களில் முக்கியமான ஆமை, கடல் சூழலியலில் பெரும் பங்கு வகிக்கிறது. அரிய உயிரினமான இவை, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல், ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்யும்.அதற்காக, ஆழ்கடலில் இருந்து, கடற்கரையை அடையும். மணலில் குழி தோண்டி முட்டையிட்டு, குஞ்சுகள் பொரிக்கும்.அவை இனப்பெருக்கத்திற்காக தற்போதும், கடற்கரைக்கு படையெடுக்கின்றன.கடற்கரையை நோக்கி வரும் போது அல்லது திரும்பும் போது, மீன்பிடி படகில் மோதியும், வலையில் சிக்கியும் காயமடைந்து இறக்கின்றன. அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களாக, ஏராளமான ஆமைகள் இறந்தன. திருக்கை, இழு, கடமா உள்ளிட்ட மீன்பிடி வலைகளில் சிக்கியே, அவை இறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே, செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள், அத்தகைய மீன்பிடி வலையில் சிக்கும் ஆமைகளை உயிருடன் மீட்டு, பாதுகாப்பாக கடலில் விடுமாறு, மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ