அக்னி வீரர் ஆள் சேர்ப்பு பிப்., 5ல் பேரணி துவக்கம்
செங்கல்பட்டு,காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில், அக்னி வீரர் ஆள் சேர்ப்பு பேரணி, வரும் பிப்., 5ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில், அக்னி வீரர் ஆள் சேர்ப்பு பேரணி, வரும் பிப்., 5ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் டிரேட்ஸ்மேன் 10ம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம். சிப்பாய் பார்மசி மற்றும் சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் பணிகளுக்கு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள், அந்தந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் தகுதி அளவுகோலின்படி பதிவு செய்துள்ளனர்.விண்ணப்பதாரர்கள் www.joinindianarmynic ல் பதிவேற்றியபடி, ஆவணங்களையும் கொண்டு வருவது அவசியம். மேலும் விபரங்களுக்கு, சென்னையின் ஆட்சேர்ப்பு அலுவலகம் தொலைபேசி எண் 044- 25674924ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.