மேலும் செய்திகள்
நகை கடையில் கொள்ளை முயற்சி
05-May-2025
அயோத்தியாப்பட்டணம்,அயோத்தியாப்பட்டணம் அடுத்த கருமாபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி மாதேஸ்வரி, 55. இவர், அ.தி.மு.க., அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய மகளிர் அணி துணை செயலராக உள்ளார். இவர் சட்டவிரோதமாக, வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை காரிப்பட்டி போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அதில், மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மாதேஸ்வரியை கைது செய்தனர்.
05-May-2025