உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அகரம்தென் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

அகரம்தென் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

செங்கல்பட்டு, அகரம்தென் கிராம நிர்வாக அலுவலரை 'சஸ்பெண்ட்' -செய்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர், தன் நிலத்திற்கு போலியான பட்டா வாங்கிய சுரேஷ் மற்றும் அகரம்தென் கிராம நிர்வாக அலுவலர் வீரக்குமார் ஆகியோர் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.அதன் பின், சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் அடுத்த அகரம்தென் கிராம நிர்வாக அலுவலர் வீரக்குமாரை கைது செய்து, கடந்த 19ம் தேதி சிறையில் அடைத்தனர்.இதைத்தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் வீரக்குமாரை சஸ்பெண்ட் செய்து, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை