மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் கூட்டுறவு துறை இணை பதிவாளர் நியமனம்
23-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மதுராந்தகம் நகர கூட்டுறவு வங்கியில் நேற்று துவக்கப்பட்டது. செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதி வாளர் மற்றும் விழாக்குழு தலைவரான நந்தகுமார் கொடியேற்றியும், மரக்கன்றுகள் நட்டும் விழாவை துவக்கினார். இந்த விழா, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. விழாவில், மதுராந்தகம் சரக துணை பதிவாளர் செல்வி, செங்கல்பட்டு சரக துணை பதிவாளர் உமாசங்கரி, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சாவித்ரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார் - பதிவாளர் மற்றும் செயலாட்சியர் வேலு, இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுராந்தகம் நகர கூட்டுறவு வங்கியின் கூட்டுறவு சார் - பதிவாளர் மற்றும் செயலாட்சியர் முருகன் நன்றி கூறினார்.
23-Oct-2025