உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூஞ்சேரி ஏரியில் அளவுக்கு மீறி மண் எடுப்பதாக குற்றச்சாட்டு

பூஞ்சேரி ஏரியில் அளவுக்கு மீறி மண் எடுப்பதாக குற்றச்சாட்டு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சி, பேரூர் பகுதியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், நாள் ஒன்றுக்கு, 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 4,276 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலம், ஆலைக்காக நீண்டகால குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது.அங்கு வளர்க்கப்பட்டிருந்த சவுக்கு மரங்களை, முற்றிலும் வெட்டி அகற்றி, கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. கிழக்கு கடற்கரை சாலைக்கும், கடற்கரைக்கும் இடையேயுள்ள ஆலை அமைவிடம், மணற்பரப்புடன் மிக தாழ்வாக உள்ளது.ஆலை கட்டுமானத்திற்காக, வளாக பகுதியை பல அடிகள் உயர்த்தி உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு தேவையான கிராவல் மண்ணை, மாமல்லபுரம் பூஞ்சேரி ஏரியிலிருந்து எடுக்க, அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது.வெளிமாவட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஏராளமான டாரஸ் லாரிகளில், தற்போது கிராவல் மண் கொண்டு செல்லப்பட்டு, ஆலை வளாகத்தில் நிலமட்டம் உயர்த்தப்படுகிறது.அதற்காக, பூஞ்சேரி ஏரியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஆழத்திற்கு சுரண்டி, விதிமீறி மண் எடுக்கப்படுவதாக, அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி