உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பண்டைய கால துப்பாக்கி குண்டுகள் செங்கை பாலாற்றில் கண்டெடுப்பு

பண்டைய கால துப்பாக்கி குண்டுகள் செங்கை பாலாற்றில் கண்டெடுப்பு

மாமல்லபுரம்:வள்ளிபுரம் அருகே பாலாற்றில், பண்டைய கால பீரங்கி குண்டு, கைத்துப்பாக்கியின் ஈய குண்டு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு அடுத்த புலிப்பரகோவில் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலை, அறிவியல் கல்லுாரி வரலாற்றுத் துறையில், விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், பாலாற்றில் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். சோழர் மற்றும் பல்லவர் கால நாணயங்கள், பெருங்கற்கால கற்கருவிகள், பழங்கால ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை இவர் கண்டெடுத்துள்ளார். தற்போது, செங்கல்பட்டு மாவட்டம், வள்ளிபுரம் அருகே பாலாற்றில், பண்டைய கால பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து, மதுரை வீரன் கூறியதாவது: வள்ளிபுரம் அருகே பாலாற்றில் பண்டைய கால பீரங்கி இரும்பு குண்டு, கல் குண்டு, கைத்துப்பாக்கியின் ஈய குண்டு, போர் வீரரின் ஆடை பொத்தான் ஆகியவை கிடைத்துள்ளன. பழங்காலத்தில் இப்பகுதி பாலாற்றில் போர் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. சங்க கால முத்திரை செம்பு மோதிரம், கலப்பு உலோக மோதிரம் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வாறு, அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி