உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்தசுவாமி கோவிலில் மறு ஏலம் அறிவிப்பு

கந்தசுவாமி கோவிலில் மறு ஏலம் அறிவிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் ஜூலை 1 முதல், 2026 ஜூன் 30ம் தேதி வரை, ஓராண்டு காலத்திற்கான பல வகை உரிமம் ஏலம், கடந்த மே 29ம் தேதி நடத்தப்பட்டது.அப்போது பிரசாத கடை உரிமம், தற்காலிக கடை வரி வசூல் உரிமம், வாகன பாதுகாப்பு கட்டணங்கள் பெறும் உரிமம், ஆடு, கோழி சேகரிக்கும் உரிமம், வெள்ளி உரு விற்பனை உரிமம் ஆகியவை ஏலம் எடுக்கப்பட்டன.இதில், காணிக்கை முடி சேகரிக்கும் உரிமம், நெய் தீபம் விற்பதற்கான உரிமம், சிதறு தேங்காய், உப்பு, மிளகு ஆகியவை சேகரிப்புக்கான உரிமம் ஆகியவற்றுக்கு, யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனால், அப்போது ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட உரிமத்திற்கான மறு ஏலம், வரும் 16ம் தேதி, முற்பகல் 11:00 மணிக்கு நடத்துவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதில், காணிக்கை முடிகள் சேகரிப்பு உரிமங்களுக்கு, 20 லட்சம் ரூபாய், நெய் தீபம் விற்பனை உரிமத்திற்கு, 10 லட்சம் ரூபாய், சிதறு தேங்காய், உப்பு, மிளகு சேகரிப்பு உரிமத்திற்கு 10,000 ரூபாய் என முன்வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இத்தொகைக்கான வங்கி வரைவோலையை, கோவில் நிர்வாக அலுவலகத்தில் செலுத்தி, அதற்கான ரசீதுடன், 'டெண்டர்' பெட்டியில் விண்ணப்ப படிவத்தை, காலை 11:00 மணிக்குள் போட்டு, ஏலத்தில் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை