உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே, சாலையோரம் நின்ற செங்கல் ஏற்றிய டிப்பர் லாரி மீது, மற்றொரு டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு பகுதியில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு, கூவத்துார் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்றது. மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் சென்ற போது, பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு அருகே, வழி கேட்பதற்காக ஓட்டுநர் சாலையோரம் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது, பவுஞ்சூரில் இருந்து கூவத்துார் நோக்கிச் சென்ற மற்றொரு காலி டிப்பர் லாரி, சாலையோரம் நின்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காலி டிப்பர் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்து, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக, பவுஞ்சூர் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின், அணைக்கட்டு போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ