உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொங்கல் வைத்த அப்பார்ட்மென்ட்வாசிகள் போரூரில் களைகட்டியது கொண்டாட்டம்

பொங்கல் வைத்த அப்பார்ட்மென்ட்வாசிகள் போரூரில் களைகட்டியது கொண்டாட்டம்

போரூர்:'தினமலர்' நாளிதழ் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை ஒன்றிணைத்து, 'கார்னிவெல்- அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.மக்களின் வரவேற்பை அடுத்து, சென்னையின் அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தப்பட்டு வருகிறது. ‛கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், மயில் மார்க் ஹோம் கேர் புரோடக்ட்ஸ் மற்றும் போகா ஈவென்ட்' உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து, நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன.அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, போரூரில் உள்ள 'ஓசியன் குளோரோபில்' அடுக்குமாடி குடியிருப்பில், பிற்பகல் 2:00 மணி முதல் ‛கார்னிவெல் - அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சி நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.இதில், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். குடியிருப்பு வாசிகள் பாரம்பரிய முறையில், விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். இதனால், குடியிருப்பே திருவிழாக்கோலம் பூண்டது.இந்நிகழ்வில், மாட்டு வண்டியில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வலம் வந்து மகிழந்தனர்.தொடர்ந்து உறியடி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மினி மாரத்தான், மேஜிக் ஷோ, சிறுவர்கள் பேஷன் ேஷா, ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.இதில், அனைவரும் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர். அனைத்துவித போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.‛ஓசியன் குளோரோபில்' அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க தலைவர், சி.எஸ்.சங்கர், 64, கூறியதாவது:இந்த அளவிற்கு மக்கள் கூடுவர்கள் என, நாங்களும் எதிர்பார்க்கவில்லை. கார், பஸ், ரயில் மற்றும் விமானத்திலும் சென்றுள்ளோம். ஆனால், மாட்டு வண்டியில் போகவில்லை என்ற ஆதங்கம் பலருக்குள்ளும் இருந்துள்ளது. அது, 'தினமலர்' அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் வாயிலாக நீங்கியது. பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடியது போன்ற உணர்வை தந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை