உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆளவந்தார் அறக்கட்டளைக்கு செயல் அலுவலர் நியமனம்

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு செயல் அலுவலர் நியமனம்

மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. அதே துறையின்கீழ், ஆளவந்தார் அறக்கட்டளையும், இங்கு இயங்குகிறது. இரண்டு நிர்வாகங்களின் செயல் அலுவலராக சக்திவேல் பொறுப்பு வகித்தார்.ஆளவந்தார் அறக்கட்டளையின் குழு கோவிலாக, மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர், கடம்பாடி மாரி சின்னம்மன், கூவத்துார் திருவாலீஸ்வரர் ஆகிய கோவில்களும் நிர்வகிக்கப்படுகின்றன.ஸ்தலசயன பெருமாள் கோவிலின் குழு கோவில்களாக, சதுரங்கப்பட்டினம் திருவரேஸ்வரர், மலைமண்டல பெருமாள் உள்ளிட்ட கோவில்களும் நிர்வகிக்கப்படுகின்றன.செயல் அலுவலர் சக்திவேல், பதவி உயர்வு பெற்று, விழுப்புரம் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஸ்தலசயன பெருமாள் கோவில், ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றின் செயல் அலுவலராக, திருப்போரூர் கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல், கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ