ஊராட்சி செயலருக்கு பாராட்டு விழா
திருப்போரூர்திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளன. இதில், படூர், தாழம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த 38 ஆண்டுகளாக ஊராட்சி செயலராக வாசுதேவன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணி ஒய்வு பெற்றார்.இதையடுத்து, திருப்போரூர் ஊராட்சி செயலர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து பாராட்டு விழா நடத்தியது. பி.டி.ஓ., பூமகள் தேவி தலைமை வகித்தார்.கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஹரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி உதவி இயக்குநர் சரவணன், உதவி திட்ட அலுவலர் பரணி, பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், வெங்கட்ராகவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.