உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடைவரை விரிசலில் உட்புகும் மழைநீர் தொல்லியல் துறை தடுப்பு நடவடிக்கை

குடைவரை விரிசலில் உட்புகும் மழைநீர் தொல்லியல் துறை தடுப்பு நடவடிக்கை

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. அவற்றை தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. அவற்றின் மீது பல்வேறு மாசுக்கள் படிந்து பொலிவிழக்கும் நிலையில், அத்துறையினர் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாசுக்களை அகற்றி துாய்மைப்படுத்துகின்றனர்.இது ஒருபுறமிருக்க, குடைவரைகள் அமைந்துள்ள பாறை குன்றுகளின் மேற்புறம் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, குடைவரையின் உட்புறம் மழைநீர் ஒழுகுகிறது.குறிப்பாக, அர்ஜுனன் தபசு சிற்பம் மற்றும் பஞ்சபாண்டவர் குடைவரை அமைந்துள்ள பாறை குன்றின் மேற்பரப்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, குடைவரையின் உட்புறம் மழைநீர் அதிகம் உட்புகுகிறது.பிற்காலத்தில் மண்டபத்தின் மேல்தள பரப்பில், மேலும் விரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. இதையடுத்து, மழைநீர் உட்புகாமல் தவிர்க்க, அத்துறையின் பொறியாளர் ஆய்வு செய்தார். விரிசல் அதிகரிக்கிறதா என்பதை அறிய, விரிசல் இடையில், மெலிதான கண்ணாடி அமைத்து பரிசோதிக்கப்பட்டது.இந்நிலையில், பாறை குன்றின் மேற்பரப்பிலிருந்து, மண்டப மேல்தள பகுதிக்கு மழைநீர் பெருக்கெடுப்பதை தடுக்க, உயரம் குறைவான கற்கள், கான்கிரீட் கலவை கலந்த தடுப்பு அமைக்கப்பட்டது.மேலும், விரிசல் பகுதிகளை கண்டறிந்து, மழைநீர் ஒழுகாமல் தடுக்க, கசிவை தடுக்கும் எண்ணெய், சுண்ணாம்பு கலவை, சிறுகற்கள் கலந்த கலவையும் நிரப்பப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ