உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிடிவாரன்ட் குற்றவாளி சிக்கினார்

பிடிவாரன்ட் குற்றவாளி சிக்கினார்

மதுரவாயல்:மதுரவாயல், சீமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 43. இவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம், மதுரவாயலைச் சேர்ந்த வினோத் குமார், 39, என்பவர் வந்து சாப்பிட்டுள்ளார். பின், பணம் தராமல், கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், கல்லாவில் இருந்து பணத்தையும் எடுத்துச் சென்றார். இதுகுறித்த புகாரின்படி, மதுரவாயல் போலீசார், வினோத்குமாரை பிடித்தனர். விசாரணையில், 2014ல் மதுரவாயலில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு, வினோத்குமார் தலைமறைவாக இருந்தது தெரிந்தது. இரு வழக்குகளிலும் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ