உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

செங்கல்பட்டு:ஆட்டோவில் பயணித்த 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 37; ஆட்டோ ஓட்டுநர்.இவர் தன் ஆட்டோவில், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியரை, தினமும் பள்ளிக்கு சவாரி அழைத்து சென்றார்.கடந்த 3ம் தேதி, ஆட்டோவில் பயணம் செய்த 7 வயது சிறுமியிடம், ராஜசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து சிறுமி, தன் பெற்றோரிடம் கூற, அவர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இது குறித்து விசாரித்த போலீசார், ராஜசேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ