பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு
மறைமலை நகர், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, மறைமலை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மறைமலை நகர் தீயணைப்பு துறை அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பட்டாசு வெடிக்கும் போது பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகே, பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, தீக்காயம் ஏற்பட்டால் எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்து, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. பள்ளி மாணவ -- மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.