உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமரச தீர்வு மையம் குறித்து செங்கையில் விழிப்புணர்வு

சமரச தீர்வு மையம் குறித்து செங்கையில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சமரச தீர்வு மையத்தின் முக்கியத்துவம் தொடர்பாக, நேற்று விழிப்புணர்வு நடந்தது.செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமரச மையம் உள்ளது. இம்மையத்தின் முக்கியத்தும் குறித்த விழிப்புணர்வு பேரணியை, சமரச தீர்வு மைய தலைவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, நீதிமன்ற வளாகத்தில் நேற்று துவக்கி வைத்தார்.இங்கு துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவாயில் அருகில் முடிந்தது.இந்த விழிப்புணர்வில், நிலுவை வழக்குகளில் சமரச மையத்தில் சுமுகமாக தீர்வு காணப்பட்டால், ஏற்கனவே செலுத்திய நீதிமன்ற கட்டணம் முழுவதையும் திரும்ப பெறலாம்.சமரச தீர்வு மையத்தில், இரு தரப்புக்கும் இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தை பதிவு செய்யப்படாமல் ரகசியம் காக்கப்படும். இருதரப்புக்கு இடையே வெற்றி என்ற நிலை உருவாகும்.சமரச தீர்வு மையத்தில் காணப்படும் தீர்வே இறுதியானது. மேல்முறையீடு செய்ய முடியாது உள்ளிட்ட விபரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில், செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவகுமார், பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தீஸ்வரன் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி