உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

நன்மங்கலம், மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம், ஏழுமலை தெருவில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிப்பவர் ராம்ஜி, 35. வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹரிபிரியா.தம்பதிக்கு, 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 23 நாட்களுக்கு முன், ஹரிபிரியாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் இரண்டாவது பெண் குழந்தைக்கு, ஹரிபிரியா தாய்ப்பால் புகட்டியபோது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.இதை பார்த்த ஹரிபிரியா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு சென்றார்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, மேடவாக்கம் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, ஹரிப்பிரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி