உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் பஸ் நிலைய நுழைவாயிலில் மீன் கடைகள் வைக்க தடை

செய்யூர் பஸ் நிலைய நுழைவாயிலில் மீன் கடைகள் வைக்க தடை

செய்யூர், செய்யூர் பஜார் பகுதியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செய்யூர் பகுதியில் செயல்படும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைகளுக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர்.பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில், 15க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைத்து, செய்யூர் பகுதி கடலோர கிராம மீனவர்களால், பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு போன்ற கடல்சார் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.மீன் கழிவுகள் நுழைவாயில் பகுதியில் கொட்டப்பட்டு வந்ததால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாய நிலையில் இருந்தது.மேலும், மீன்கடைகளால் மாலை நேரத்தில் நுழைவாயில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், செய்யூர் ஊராட்சி சார்பாக பேருந்து நிலைய நுழைவாயிலில் மீன்கடைகள் அமைக்க தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, இங்கு செயல்பட்டு வந்த மீன்கடை கள், சந்தை மேடு பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ