உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாக்கம் சமுதாய கூடத்தை பட்டாலியன் போலீஸ் ஆக்கிரமிப்பு

பாக்கம் சமுதாய கூடத்தை பட்டாலியன் போலீஸ் ஆக்கிரமிப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில், செங்கல்பட்டு மாவட்ட பட்டாலியன் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ளதால், இல்ல சுப நிகழ்ச்சிகள் நடத்த இடமில்லாமல், கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டு பாக்கம் காலனி, வயலுார், தாதங்குப்பம், புளிக்கொரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில், 2500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் விவசாயம், தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.இப்பகுதி மக்கள் தங்களின், இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வந்தனர்.அதனால், சில ஆண்டு களுக்கு முன், கனிமவள நிதியின் வாயிலாக, அஞ்சூரம்மன் கோவில் அருகே சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, உளுந்துார்பேட்டையில் இருந்து வரவைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் படை, 10வது பட்டாலியனைச் சேர்ந்த 90 போலீசார், பாக்கம் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அதனால், பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்த இடமில்லாமல், மதுராந்தகம், மேல்மருவத்துார் பகுதி களில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்துகின்றனர்.சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீசாருக்கு மாற்று இடம் தேர்வு செய்ய கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை