உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு, நேரமும் மாற்றம்

கடற்கரை - செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு, நேரமும் மாற்றம்

சென்னை, சென்னையில் புறநகர் 'ஏசி' மின்சார ரயில் சேவையை அதிகரித்து, கால அட்டவணையிலும் மாற்றம் செய்து, சென்னை ரயில் கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 2ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..சென்னை புறநகரில், முதல் முறையாக, 'ஏசி' மின்சார ரயில் கடந்த 19ம் தேதி துவங்கியது. பயணியரின் வரவேற்பை அடுத்து, ரயில் சேவை அதிகரிப்பது குறித்து, பயணியரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதேநேரம், வெயில் தாக்கம் அதிகமாக உள்ள பகல் வேளைகளில், ரயில் சேவை வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, நம் நாளிதழில் கடந்த 22ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், 'ஏசி' மின்சார ரயில்களின் சேவையை அதிகரித்தும், நேர அட்டவணையும் மாற்றம் செய்தும் சென்னை ரயில் கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.* அதன்படி, முதல் 'ஏசி' மின்சார ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, காலை 7:35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்* இரண்டாவது 'ஏசி' மின்சார ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை காலை 9:25 மணிக்கு வந்தடையும்* மூன்றாவது சேவை, சென்னை கடற்கரையில் இருந்து காலை 9:41 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை காலை 10:36 மணிக்கு அடையும்.* நான்காவது ரயில் சேவை, தாம்பரத்தில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மதியம் 1:55 மணிக்கு வந்தடையும்* ஐந்தாவது ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டிற்கு மாலை 4:00 மணிக்கு செல்லும்.* ஆறாவது வது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6:00 மணிக்கு வந்தடையும்.* ஏழாவது ரயில் சேவை, சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6:17 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டை, இரவு 7:50 மணிக்கு வந்தடையும்.* எட்டாவது ரயில் சேவை, செங்கல்பட்டில் இருந்து இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு இரவு 8:50 மணிக்கு செல்லும்.'ஏசி' மின்சார ரயில் கால அட்டவணை மாற்றத்துக்கு ஏற்ப, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இரண்டு மின்சார ரயில்கள், கடற்கரை -- தாம்பரம் இடையே இயக்கப்படும் ஒரு மின்சார ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது தவிர, நான்கு 'ஏசி' மின்சார ரயில் சேவை மட்டும், மே 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை திரிசூலத்தில் தற்காலிகமாக நின்று செல்லாது என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது. கூடுதல் ரயில் சேவை மற்றும் நேரம் மாற்றத்துக்கு, பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ