உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 4ம் தேதி மிதிவண்டி போட்டி

செங்கையில் 4ம் தேதி மிதிவண்டி போட்டி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் வரும் 4ம் தேதி, மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வரும் 4ம் தேதி காலை 7:00 மணிக்கு, திருப்போரூர் கூட்டுச்சாலையில், அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மாணவர்களுக்கு துவக்கப்பட உள்ளன.இதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 250 ரூபாய் வழங்கப்படும். சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை