உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துாரில் பைக் ஆட்டை

மேல்மருவத்துாரில் பைக் ஆட்டை

மேல்மருவத்துார்:ராமாபுரத்தில், 'பெட்ரோல் பங்'க்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மேல்மருவத்துார் அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 27.இவர், கடந்த 17ம் தேதி, ராமாபுரம் பெட்ரோல் பங்க்கில், 'பஜாஜ் பல்சர்' பைக்கை நிறுத்தி விட்டு, வேலைக்குச் சென்றுள்ளார்.மீண்டும் வந்து பார்த்த போது, பைக் காணாமல் போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சுந்தரம், பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.பின், இதுகுறித்து நேற்று, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி