உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கார் மீது மோதிய பைக் வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்

கார் மீது மோதிய பைக் வாலிபர் பலி; ஒருவர் படுகாயம்

சிங்கபெருமாள்கோவில், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபுதாஸ், 21. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20.இருவரும், சிங்கபெருமாள்கோவில் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் வாடகைக்கு தங்கி காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த சென்றகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.நேற்று மதியம் 3:00 மணியளவில் இருவரும், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள்கோவில் நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள்கோவில் நோக்கி 'யமஹா ஆர்.15' பைக்கில் சென்றனர்.பைக்கை பிரபு ஓட்ட, விக்னேஷ் பின்னால் அமர்ந்து இருந்தார்.ஆப்பூர் பகுதியில், நெடுஞ்சாலையில் அணுகு சாலை வளைவில் வேகமாக வந்த போது, மறைமலைநகரில் இருந்து ஒரகடம் நோக்கிச் சென்ற மாருதி கார் மீது, பைக் வேகமாக மோதியது.இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு விக்னேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரபுதாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ