மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம், தமிழக மக்களுக்கு எதிராகவும், மத்திய அரசை தொடர்ந்து குறைகூறி, தமிழகத்தில் புதிய கல்விகொள்கை, தொகுதி மறு சீரமைப்பு, தமிழகத்திற்கு காவிரிநீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும், தி.மு.க.,வை கண்டித்து, நேற்று, செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், மதுராந்தகத்தில் அவரது இல்லம் முன்பு நின்று கருப்பு கொடியேந்தி பா.ஜ.,வினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.தமிகத்தில் பாலியல் வன்புணர்வு, கொலைகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு ஊழல்கள் செய்துள்ள தமிழக அரசு, ஊழலை மூடிமறைக்கும் விதமாக, மக்களிடம் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை மக்களிடத்தில் தவறாக கொண்டு சென்று மக்களை திசை மாற்றுகின்றனர்.மதுபானத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது, அதனை கண்டிக்கும் விதமாக,கருப்பு கொடியேந்தி பா.ஜ., வினர் மதுராந்தகம், செய்யூர், சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.