மேலும் செய்திகள்
சித்தாமூரில் பா.ஜ., தேசியக்கொடி பேரணி
24-May-2025
திருப்போரூர்:திருப்போரூரில், பா.ஜ., சார்பில், பிரதமர் மற்றும் 'பஹல்காம்' தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ராணுவ வீரர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக, தேசியக்கொடி பேரணி நேற்று நடந்தது.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் அருகே துவங்கிய பேரணிக்கு, பா.ஜ., செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவின் குமார் தலைமை தாங்கினார்.இதில், மாவட்ட நிர்வாகிகள், ஹிந்து முன்னணி திருப்போரூர் தெற்கு ஒன்றிய தலைவர் பாலமுரளி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலர் ஜெய்சங்கர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் அருகே துவங்கிய இந்த பேரணியில் தேசிய கொடியை ஏந்தியபடி செங்கல்பட்டு சாலை, ஓ.எம்.ஆர்., சாலை வழியாக சென்றனர். பின், திருப்போரூர் பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.
24-May-2025