உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் கந்தசுவாமி கோவிலில் கருங்கல் தரை அமைக்கும் பணி

செய்யூர் கந்தசுவாமி கோவிலில் கருங்கல் தரை அமைக்கும் பணி

செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில், கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இங்கு, ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.கோவில், 10ம் நுாற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. நாளடைவில், கோவில் உட்புறம் மற்றும் வெளிபிராகர தரைகள் சேதமடைந்ததால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி வந்தது.இந்நிலையில், நன்கொடையாளர்கள் சார்பாக, சேதமடைந்த கோவில் உட்புறம் மற்றும் வெளி பிரகார தரைகள் அகற்றப்பட்டு, புதிதாக கருங்கல் தரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி