உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை அருகே கடலில் மூழ்கிய சகோதரியர் சடலமாக மீட்பு

மாமல்லை அருகே கடலில் மூழ்கிய சகோதரியர் சடலமாக மீட்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அருகே, கடலில் குளித்த போது நீரில் மூழ்கி மாயமான சகோதரியர் சடலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், போலீசார் மீட்டனர். சென்னை, அகரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 37; தச்சுத்தொழிலாளி. இவர், கடந்த செப்., 28ம் தேதி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருப்போரூர் கந்தசுசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின், மாலை 5:00 மணியளவில், சூலேரிக்காடு பகுதி கடலில் குளித்தனர். அப்போது வெங்கடேசன், அவரது மகள்களான கார்த்திகா, 17, துளசி, 16, அவரது சகோதரி ேஹமாவதி, 37, ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மீனவர்கள், ஹேமாவதியை காப்பாற்றினர். வெங்கடேசன், அவரது மகள்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். இந்நிலையில், வெங்கடேசன் சடலம், அதே பகுதியில் அன்று மாலை கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார், மாயமான அவரது மகள்களை தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதி கடற்கரையில் நேற்று காலை 9:00 மணியளவில் துளசியின் சடலமும், மாலை 4:00 மணியளவில், கார்த்திகா சடலமும் கரை ஒதுங்கின. அவற்றை போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை