மேலும் செய்திகள்
மறைமலைநகர் ஸ்டேஷனில் எஸ்.ஐ., போன் 'ஆட்டை'
09-Jan-2025
மறைமலைநகர், மறைமலைநகர் அடுத்த கூடலுார் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- சரண்யா தம்பதியின் மகன் அஸ்வந்த்,8.அதே பகுதியிலுள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். நேற்று மாலை 5:30 மணியளவில், வீட்டின் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.அப்போது, எதிர்பாராத விதமாக அஸ்வந்த் குளத்தில் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினார். தகவலின்படி வந்த மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி, இரண்டு மணி நேரமாக தேடி, இறந்த நிலையில் அஸ்வந்த் உடலை மீட்ட நிலையில், பொத்தேரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு, ஆட்டோவில் எடுத்துச் சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மறைமலைநகர் போலீசார் குழந்தை உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,'குடியிருப்புகள் மத்தியிலும் பள்ளிக்கு அருகிலுள்ள இக்குளத்தில், ஏற்கனவே இரு குழந்தைகள் இறந்துள்ளன.'குளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வலியுறுத்தியும், நகராட்சியினர் கண்டுகொள்ளாததால், தற்போதும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
09-Jan-2025