மேலும் செய்திகள்
மறைமலைநகரில் வழிப்பறி இருவருக்கு போலீஸ் 'காப்பு'
14-Aug-2025
மறைமலை நகர்:அனுமந்தபுரத்தில், வீட்டு பூட்டை உடைத்து பித்தளை பொருட்கள் திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில், தளபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி, 57. சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியிலுள்ள தன் மற்றொரு வீட்டில், 'பேப்பர் பிளேட்' மற்றும் கற்பூரம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த ஓராண்டாக இந்த தொழிலை நிறுத்தி விட்டு, தளபதி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை, அனுமந்தபுரத்தில் உள்ள வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அக்கம்பக்கத்தினர் குருசாமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, குருசாமி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பேப்பர் பிளேட் தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்த பித்தளை பொருட்கள் உடைத்து திருடப்பட்டு இருந்தன. இது குறித்து குருசாமி, மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, பித்தளை பொருட்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
14-Aug-2025