உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் சின்னவெண்மணியில் ஆட்டை

வீடு பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் சின்னவெண்மணியில் ஆட்டை

செய்யூர்:சின்னவெண்மணியில், வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு, அவசரத்தில் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.செய்யூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 46. இவர், சென்னை, திருவெற்றியூர் பகுதியில் தங்கி சுயதொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் சின்னவெண்மணி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து, இரவு 8:30 மணியளவில் சென்னைக்கு சென்றார்.சென்னைக்கு சென்று, நேற்று காலை, சின்னவெண்மணி வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை மொபைல்போனில் பார்த்துள்ளார்.அப்போது, கேமராக்கள் இயங்காதது தெரிந்ததால், நேற்று முன்தினம் இரவு பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.அதில், மர்ம நபர்களின் நடமாட்டம் தெரிந்ததால், வீட்டருகே இருந்தவர்களிடம் தகவல் கூறியுள்ளார்.அவர்கள் பார்த்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.உடனே, சென்னையில் இருந்து, சின்னவெண்மணி வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த ஐந்து அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும், வீட்டில் மின் சப்ளை இல்லாததால், பூஜை அறையில் இருந்த விளக்கை ஏற்றி, அந்த வெளிச்சத்தில் மர்ம நபர்கள் பீரோவை உடைத்து, கிணறு துார் வார சேமித்து வைத்திருந்த 7 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர்.பணத்தை திருடிய அவசரத்தில், தாங்கள் வந்த, 'ஸ்பிளெண்டர்' இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு, தப்பிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, செய்யூர் போலீசார் வழக்கு பதிந்து, கைரேகை நிபுணர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.வேறு இடத்தில் இருசக்கர வாகனத்தை திருடி, இந்த வீட்டில் கொள்ளையடிக்க பயன்படுத்தி உள்ளார்களா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !