மேலும் செய்திகள்
வீடு புகுந்து 24 சவரன் திருட்டு
06-Oct-2024
பெரம்பூர், பெரம்பூர், மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார், 42. இதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்க்கு சென்று உள்ளனர். சரவணகுமாரும் அவரது பெற்றோரும் நள்ளிரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்ற போது மர்மநபர்கள் இருவர் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடியுள்ளனர். பீரோவில் வைத்திருந்த 24 சவரன் நகை காணாமல் போயிருந்தது. வீட்டினுள் இருந்த 'டிவி'யையும் திருடிச் செல்வதற்காக கழற்றி வைத்திருந்தனர். இதுகுறித்து செம்பியம் காவல்நிலையத்தில் சரவணகுமார் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Oct-2024