புல்லட்டில் மோதிய பஸ் பெண் படுகாயம்
சித்தாமூர்,:மதுராந்தகம் அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23. இவர் நேற்று காலை, தன் 'ராயல் என்பீல்டு' புல்லட்டில், தாய் தங்கம், 60,என்பவரை ஏற்றிக் கொண்டு, புதுச்சேரி நோக்கிச் சென்றார்.சித்தாமூர் அடுத்த புதினாத்தோட்டம் அருகே, பின்னால் வந்த தனியார் பேருந்து, இவரது புல்லட் மீது மோதியது.இந்த விபத்தில் தங்கம், முகம் மற்றும் தலை பகுதியில் படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, பேருந்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.