மாற்றுத்திறனாளிகள் திறன் பயிற்சிக்கு அழைப்பு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அறக்கட்டளை வாயிலாக, திறன் பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் - 2, பட்ட படிப்பு முடித்த 18 வயது முதல் 35 வயதுடைய, உடல் இயக்க குறைபாடுடைய காது கேளாத, பேசும் திறனற்ற மற்றும் குறை பார்வையுடைய 25 மாற்றுத்திறனாளிக்கு, திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாக தரை தளத்தில், 'பி பிளாக்'கில் நடைபெற உள்ளது.இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், சுய முகவரியிட்ட விண்ணப்பத்துடன், தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி மருத்துவ சான்றிதழ் மற்றும் யு.டி.ஐ.டி., ஆகிய ஆவணங்களுடன், வரும் 15ம் தேதிக்குள், செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.