உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பவுஞ்சூர் ஸ்டுடியோவில் கேமரா திருட்டு

பவுஞ்சூர் ஸ்டுடியோவில் கேமரா திருட்டு

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த பெரியவெளிக்காடு கிராமம், கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 39. பவுஞ்சூர் பஜார் பகுதியில், சொந்தமாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து கடையை பூட்டிச் சென்றார்.நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் கூரையில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டைப் பிரித்து, ஸ்டுடியோவில் இருந்த நிக்கான் கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து, வினோத்குமார் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ