உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்பாட்டிற்கு வந்த சிமென்ட் கல் சாலை

பயன்பாட்டிற்கு வந்த சிமென்ட் கல் சாலை

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு திம்மாபுரம் ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சி ஆறு வார்டுகளை உள்ளடக்கியது.இதில், 1,3,5,6 ஆகிய வார்டுகளில், ஆண்டுதோறும் பருவமழையில் சாலைகள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாதவாறு இருந்தன.இதனால், மழைக்காலங்களில் சேரும், சகதியுமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கெங்கா துரை, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தார்.அதன்படி, 15வது மானியம் நிதி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி என 37.5 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.அதன்படி, மாரியம்மன் கோவில் கிழக்கு தெருவில் சிமென்ட் சாலை, வார்டு 3 -ல், முருகர் கோவில் சிமென்ட் கல் சாலை, வார்டு 5ல் தேரடி தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெரு சிமென்ட் சாலை, வார்டு 6-ல் மாரியம்மன் கோவில் குறுக்கு தெருவில் சிமென்ட் கல் சாலை என, ஊராட்சியில் சாலை அமைக்கப்படாமல் இருந்த பகுதிகளில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.இவற்றை, நேற்று, ஊராட்சி மன்ற தலைவர் கெங்காதுரை மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி