பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ்
திருப்போரூர்:திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு, கடந்த 1ம் தேதி முதல், நேற்று வரை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியின் நிறைவு விழா, பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சப் - -கலெக்டர் மாலதி ஹெலன் பங்கேற்று, பயிற்சி முடித்த தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் தாசில்தார் சரவணன், கேளம்பாக்கம் மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர்.