நெல் கொள்முதலில் செங்கை முதலிடம் விவசாயிகளுக்கு ரூ.477 கோடி வழங்கல்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்தில், 1.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 30,265 விவசாயிகளுக்கு, 477.29 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய எட்டு தாலுகாக்கள் உள்ளன.இங்கு சம்பா பருவத்தில், 1.13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில், 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதில், மத்திய அரசின் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாததால், பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, அந்த நெல் கொள்முதல் நிலையங்களை கையகப்படுத்தி, தமிழக அரசு சார்பில் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நெல் கொள்முதல் செய்யும் பணி துவங்கியது. வரும் 30ம் தேதி வரை, கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.தற்போது, கடந்த 15ம் தேதி வரை, செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து, 1.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 477.29 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட சம்பா, நவரை பருவங்களில், நெல் விளைச்சல் அதிகரித்து உள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து, பிற மாவட்டங்களில் நெல் கொள்முதலில், செங்கல்பட்டு மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல்
ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் ரூ. கோடி2022 98 23,509 320.28 1.56 லட்சம் டன்2023 117 24,801 351.23 1.632024 109 21,688 321.92 1.392025 ஜூன்15 வரை 140 30,265 477.29 1.97
விவசாயிகளிடம் நெல் கொள்முதல்
ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் ரூ. கோடி2022 98 23,509 320.28 1.56 லட்சம் டன்2023 117 24,801 351.23 1.632024 109 21,688 321.92 1.392025 ஜூன்15 வரை 140 30,265 477.29 1.97