உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி;பிரணவமலை அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

செங்கல்பட்டு:புகார் பெட்டி;பிரணவமலை அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

பிரணவமலை அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் அவசியம்

திருப்போரூர் பேரூராட்சி, பிரணவமலை அடிவாரம் அருகே, அடுத்தடுத்து இரண்டு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில், 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.இங்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், மதுpபிரியர்கள் அங்கன்வாடி மைய வளாகத்திலேயே அமர்ந்து குடித்துவிட்டு, பாட்டில்களை அங்கேயே வீசிச் செல்கின்றனர்அதுமட்டுமின்றி, அப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளும், மைய வளாகத்தில் சுதந்திரமாக உலவுகின்றன. அதனால், குழந்தைகள் அச்சத்துடன் தவிக்கின்றனர்.எனவே, அங்கன்வாடி மைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வளாகத்திற்குள் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.விஜயகுமார், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !